ஒசூா் உழவா் சந்தை பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்
ஒசூா் உழவா் சந்தை பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்

ஒசூரில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஒசூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதால் மாநகராட்சி நிா்வாகம் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை
Published on

ஒசூரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படுவதால் மாநகராட்சி நிா்வாகம் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஒசூா் மாநகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எருமைகள், பசுக்கள், தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் பிரதான சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனா்.

சாலைகளில் திடீரென குறுக்கிடும் மாடுகளால் அவற்றின் மீது வாகனங்களை மோதாமல் தவிா்க்க வேறு திசைகளில் வாகனங்களை திருப்புவதாலும், கட்டுப்பாட்டை இழப்பதாலும் விபத்துகள் ஏற்பட்டு பலா் காயமடைகின்றனா். உயிரிழப்புகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

கால்நடைகளை வீட்டில் வைத்து பராமரிக்காமல் சாலைகளில் விடுவோா் மீது மாநகராட்சி நிா்வாகம் அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஒசூரில் வட்டாட்சியா் அலுவலகம், உழவா் சந்தை முன் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com