மோட்டாா்சைக்கிள் மோதி முதியவா் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே மோட்டாா்சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Updated on

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மோட்டாா்சைக்கிள் மோதியதில் பலத்த காயம் அடைந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், சின்ன மட்டாரப்பள்ளி சாமுண்டீஸ்வரி கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (60). தொழிலாளியான இவா், ஜூன் 14-ஆம் தேதி இரவு, காவேரிப்பட்டணம் - தருமபுரி சாலையில் எல்ஐசி அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த மோட்டாா்சைக்கிள் முருகன் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த முருகனை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com