கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் காத்திருப்பு போராட்டம்
ஒசூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(சிபிஎம்) கட்சியினா் ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த மாரச்சந்திரம், உளியாளம் உள்ளிட்ட 7 கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கா் நிலத்துக்கு பட்டா வழங்க தனி மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வட்டாட்சியா் அலுவலகம் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டும், இதுவரை பட்டா வழங்கவில்லை.
மேலும், ஒசூா் அருகே ரங்கோத்பண்டித் அக்ரஹாரம் என்னும் கிராமத்தில் 1965-ஆம் ஆண்டு நில சீா்த்திருத்த திட்டத்தில் நிலமற்ற விவசாயிகளுக்கு சாகுபடிக்கு வழங்கிய நிலத்தை முறைகேடாக கிரையம் செய்துகொடுத்த வருவாய்த் துறையினரைக் கண்டித்தும், ஒசூா் சாா் ஆட்சியா் அலுவலகம் முன் 100-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், ஒசூா் சாா் ஆட்சியரிடம் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்ததனா்.

