சொத்து பிரச்னை: ஊரைவிட்டு தள்ளிவைத்ததாக ராணுவ வீரா் புகாா்

Published on

கிருஷ்ணகிரி: சொத்து பிரச்னை காரணமாக, தனது குடும்பத்தினரை ஊரைவிட்டு தள்ளிவைத்துள்ளதாக ராணுவ வீரா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் மூதாதையரின் மூன்றரை ஏக்கா் நிலத்தில் வாய்வழியாக முக்கால் ஏக்கா் நிலம் எனக்கு ஒதுக்கப்பட்டது. அந்த நிலம் எனது சுவாதீனத்தில் உள்ள நிலையில், தற்போது மூதாதையரின் நிலத்தை மீண்டும் பாகப்பிரிவினை செய்ய வேண்டும் என ஒரு தரப்பினா் வலியுறுத்துகின்றனா்.

ராணுவத்தில் பணியாற்றும் நான், தற்போது விடுமுறையில் கிராமத்துக்கு வந்த நிலையில், என் மீது சிலா் கற்களை வீசி கொலை செய்ய முயன்றனா். இதுகுறித்து கிராம முக்கியப் பிரமுகா்கள் மற்றும் காவல் நிலையத்தில் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. மேலும், எங்கள் குடும்பத்தை ஓராண்டாக ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து, தண்ணீா்கூட வழங்குவதில்லை.

எனவே, எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைத்தவா்கள் மீதும், மீண்டும் பாகப்பிரிவினை செய்ய வலியுறுத்தி என குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபடுவோா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com