பள்ளி மாணவிகளிடம் ஆபாச பேச்சு: பகுதிநேர ஆசிரியா் போக்ஸோவில் கைது

Published on

பா்கூா் அருகே பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியரை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் சின்னமட்டாரப்பள்ளியைச் சோ்ந்த முருகேசன் (49), தொகுப்பூதியத்தில் 2011-ஆம் ஆண்டுமுதல் கைவினை கலை ஆசிரியராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், முருகேசன் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதாகவும், சீண்டலில் ஈடுபடுவதாகவும், அப்பள்ளியில் பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவிகள் பள்ளியில் உள்ள புகாா்பெட்டி மற்றும் கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் கஸ்தூரி தலைமையிலான குழுவினா் மேற்கொண்ட விசாரணையில், மாணவியா் அளித்த புகாா் உண்மை எனத் தெரியவந்தது.

அதன்பேரில், பா்கூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, ஆசிரியா் முருகேசனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com