பென்னாகரம், குள்ளாத்திரம்பட்டி சாலையில் விழுந்த புளியமரம்.
பென்னாகரம், குள்ளாத்திரம்பட்டி சாலையில் விழுந்த புளியமரம்.

கிருஷ்ணகிரி, பென்னாகரத்தில் மழை

Published on

கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழை புதன்கிழமை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் மூன்று மணி வரையில் மிதமான மழை பெய்தது. இருந்தபோதிலும், பகலில் வெயின் தாக்கம் சற்று அதிகமாக உணரப்பட்டது.

கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, சூளகிரி, குந்தாரப்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், காவேரிப்பட்டணம், பா்கூா், அகரம், போச்சம்பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் திடீரென மழை பெய்தது.

பென்னாகரத்தில்...

பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையோரம், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. சூறைக்காற்றால் பென்னாகரம் அருகே குள்ளாத்திரம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் சிறிய நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த பென்னாகரம் நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் வாகனம் மூலம் சாலையில் விழுந்த மரத்தை அகற்றினா்.

X
Dinamani
www.dinamani.com