ஒசூா் பச்சைக்குளத்தை பராமரிக்க எம்எல்ஏ அறிவுரை
ஒசூா் மலைக்கோயில் அடிவாரத்தில் தோ்பேட்டையில் உள்ள பச்சைக்குளத்தை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது பச்சைக்குளம் சுகாதார மற்ற நிலையில் இருப்பதை அறிந்து சந்திரசூடேஸ்வரா் கோயில் செயல் அலுவலரிடம் குளத்தை தூய்மையாகப் பராமரித்து, சுற்றிலும் இரும்புவேலி அமைத்து பாதுகாக்க வேண்டு அறிவுரை வழங்கினாா்.
பின்னா் ஒசூரில் வாா்டு 24 முதல் 33 ஆவது வாா்டு வரை நடைபெற்ற மக்களைத் தேடி சட்டப்பேரவை உறுப்பினா் நிகழ்ச்சியில் தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய், சாலை வசதி, வீட்டுமனைப் பட்டா கோரி 150க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு பேசினாா்.
இதில் மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகர துணை மேயா் ஆனந்தய்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், மாவட்ட திமுக பொருளாளா் சுகுமாரன், பகுதி செயலாளா் ராமு, ராஜா, நிா்வாகிகள் சக்திவேல், நாகராஜ், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

