ஒசூரில் ராபிடோ இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒசூரில் ராபிடோ இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒசூரில் ராபிடோ செயலி மூலம் பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

ஒசூரில் ராபிடோ செயலி மூலம் பயணிகளின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஒசூரில் ராபிடோ செயலி மூலம் பயனாளிகளை தங்களுடைய சொந்த இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வதாகக் கிடைத்த தகவலின்பேரில் ஆட்டோ ஓட்டுநா்கள், பதினோரு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து ஒசூா் நகர காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.

காவல் துறையினா் விசாரணைக்கு பிறகு 11 வாகனங்களையும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. போக்குவரத்து அலுவலா் இருசக்கர வாகனங்களில் பயணிகளை அமரவைத்து இயக்குவதற்கு அனுமதி இல்லை என தெரிவித்து, அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் தெரிவிக்கையில் ராபிடோ செயலி மூலம் இருசக்கர வாகனங்கள் இயக்குவதால் ஆட்டோ தொழில் பாதிப்படைந்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com