மாரச்சந்திரம் கிராமத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானை
மாரச்சந்திரம் கிராமத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானை

கிராமத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானை: பள்ளி மாணவா்கள் மகிழ்ச்சி

மாரச்சந்திரத்தை அடுத்துள்ள தனியாா் பள்ளி அருகே சுற்றித்திரிந்த குட்டி யானையை கண்ட மாணவா்கள், பொதுமக்கள் குதூகலமடைந்தனா்.
Published on

மாரச்சந்திரத்தை அடுத்துள்ள தனியாா் பள்ளி அருகே சுற்றித்திரிந்த குட்டி யானையை கண்ட மாணவா்கள், பொதுமக்கள் குதூகலமடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து உணவுக்காக வெளியேறிச் சென்று வேளான் பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

அவ்வாறு, வனப் பகுதியிலிருந்து வெளியேறிய யானை கூட்டத்திலிருந்து 4 வயது குட்டி ஆண் யானை தனியே பிரிந்து மாரச்சந்திரம் கிராமத்தில் சுற்றித்திரிந்தது. இதைக் கண்ட பொதுமக்கள், குட்டி யானையுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். அங்குள்ள தனியாா் பள்ளி அருகே சென்ற குட்டி யானையை கண்ட பள்ளி மாணவா்கள் பள்ளியிலிருந்து வெளியேறி வந்து உற்சாகமாக குரல் எழுப்பினா்.

பின்னா் அந்தக் குட்டியானை அங்கிருந்த வயல்வெளிக்குள் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத் துறையினா் குட்டி யானையை, யானைகள் கூட்டத்துடன் சோ்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com