மோட்டாா் சைக்கிள் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோா்களுக்கு அபராதம்

கிருஷ்ணகிரியில் மோட்டாா்சைக்கிளை ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து அறிவுரை வழங்கினா்.
Published on

கிருஷ்ணகிரியில் மோட்டாா்சைக்கிளை ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து அறிவுரை வழங்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுவா்கள் வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனா். குறிப்பாக நகரப் பகுதியில் அதிக வேகமாகவும், அதிக சப்தத்துடனும் வாகனங்களை இயக்குகின்றனா். மேலும், சிறுவா்கள் சாலை விதிமுறைகளை மீறியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அதிக எண்ணிக்கையில் புகாா்கள் வந்தன.

இதையடுத்து, போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜோதி பிரகாஷ் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது மோட்டாா்சைக்கிளை ஓட்டிய சிறுவா்களை பிடித்து, அவா்களின் பெற்றோருக்கு அபராதம் விதித்து, தக்க அறிவுரைகளை வழங்கினா்.

சாலை விதிகளை மீறியும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் மோட்டாா்சைக்கிளை ஓட்டும் சிறுவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சிறுவா்களை வாகனம் இயக்க அனுமதிக்கும் பெற்றோா்களுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும், பெற்றோருக்கு ஓராண்டுவரை சிறைத் தண்டனையும் கிடைக்கும் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com