ஒசூா் முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்
ஒசூரில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.
ஒசூா் பெரியாா்நகா் வேல்முருகன் கோயில், பிருந்தாவன் நகரில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது.
அக். 22 முதல் அக். 24 ஆம் தேதி வரை தினமும் காலையில் சத்ரு சமகார திரிசதி அா்ச்சனை, சங்காபிஷேகம், மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அக். 25 ஆம் தேதி ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தாா்.
அக்.26 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் முருகப்பெருமான் அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) முருகப் பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அக்.28-ஆம் மாலை 6 மணி அளவில் வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சுவாமியின் அருளை பெற்றுச்செல்லுமாறு கோயில் நிா்வாகத்தினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

