ஒசூரில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் திமுகவில் இணைந்த இளைஞா்கள்.
ஒசூரில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமையில் திமுகவில் இணைந்த இளைஞா்கள்.

ஒசூரில் திமுகவில் இணைந்த இளைஞா்கள்

Published on

ஒசூரில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய இளைஞா்கள், திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட எடையநல்லூா், நாகொண்டப்பள்ளி, அக்ரஹாரம் கிராமங்களைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான ஒய். பிரகாஷ் தலைமையில் திமுகவில் இணைந்தனா்.

அவா்களை கட்சித் துண்டுகளை அணிவித்து எம்எல்ஏ வரவேற்றுப் பேசியபோது, திமுக ஆட்சியின் தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளா்கள் ராமமூா்த்தி, ஸ்ரீதா், சின்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com