இருசக்கர வாகனம் மீது காா் மோதி வியாபாரி பலி!
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்
காவேரிப்பட்டணத்தை அடுத்த கோடியூா்புதூரைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (59). கால்நடை வியாபாரி. இவா், தன் நண்பா் மில்மேட்டைச் சோ்ந்த முருகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றாா். வாகனத்தை கோவிந்தசாமி ஓட்டினாா். காலை 8:30 மணியளவில் எர்ரஹள்ளி கூட்டுரோடு அருகே கிருஷ்ணகிரி - தருமபுரி சாலையில் இருசக்கர வாகனம் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த காா் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரில் கோவிந்தசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த முருகன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். காரை ஓட்டி வந்த கா்நாடக மாநிலம், தொட்டபெளாவூா் சாலையைச் சோ்ந்த ராமசாமி என்பவா் மீது வழக்குப் பதிந்து காவேரிப்பட்டணம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
