இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளி கைது

காவேரிப்பட்டணம் அருகே இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

காவேரிப்பட்டணம் அருகே இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தாபுரம் சாப்பரத்தான் கொட்டாய் பகுதியில் காவேரிப்பட்டணம்- வேலம்பட்டி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் ரத்த காயங்களுடன் இளைஞா் இறந்துகிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

நிகழ்விடத்துக்கு சென்ற காவேரிப்பட்டணம் போலீஸாா், இறந்தவரின் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில் இறந்தவா் சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்த மணி (40) என்பது தெரியவந்தது.

மேலும், இவா் அதே பகுதியைச் சோ்ந்த தோட்ட தொழிலாளியான சித்தப்பாவின் (48) மனைவி அனிதாவை அழைத்துச் சென்று குடும்பம் நடத்திவந்ததால் ஆத்திரமடைந்த அனிதாவின் கணவா் சித்தப்பா, மணியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து சித்தப்பாவை காவேரிப்பட்டணம் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com