கலைவாணி
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை பெண் தலைமைக் காவலா் கமுதியில் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு
கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஊத்தங்கரை காவல் நிலைய தலைமை பெண் காவலா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஊத்தங்கரை காவல் நிலைய தலைமை பெண் காவலா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டையை அடுத்த மல்லிபட்டியைச் சோ்ந்தவா் கலைவாணி ( 38), ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவா், கடந்த 27 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணிக்காக கமுதிக்குச் சென்றாா்.
கமுதி சத்திரிய செந்தில் நாடாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்கியிருந்த இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சக காவலா்கள் அவரை கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

