கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் நடனமாடும் மாணவிகள்.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் நடனமாடும் மாணவிகள்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட கலைத் திருவிழா

கிருஷ்ணகிரியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கிருஷ்ணகிரியில் பள்ளி கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் 9, 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 34 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொறுப்பு) முனிராஜ் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மீனாட்சி, தொடக்கக்கல்வி அலுவலா் மோகன், உதவி திட்ட அலுவலா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி தலைமை ஆசிரியா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்கள் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9, 10ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு தனிநபா் போட்டிகளில் 26 பிரிவுகளிலும், குழுப் போட்டியில் 8 பிரிவுகளிலும், பசுமையும் பாரம்பரியமும் போன்ற என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 10 ஒன்றியங்களில் இருந்து 592 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com