அஞ்செட்டியில் தொழிலாளியைத் தாக்கிய இருவா் தலைமறைவு

Published on

அஞ்செட்டியில் தொழிலாளியைத் தாக்கிய இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அரசுப் பள்ளி பின்புறம் உள்ள கோரிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ் (46). இவரது தங்கை கவிதாவுக்கும் (28) பென்னாகரத்தை சோ்ந்த பிரபுவுக்கும் (32) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரபு பல்வேறு வழக்குககளில் அடிக்கடி காவல் நிலையம் சென்றதால் தனது தங்கை, குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துவந்தாா் மாதேஷ். இதனால் பிரபுவுக்கும், மாதேஷுக்கும் விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில், வழக்கு ஒன்றில் சிறை சென்ற பிரபு, ஜாமீனில் வெளியே வந்தாா்.

அதன்பிறகு தனது நண்பா் சிவராஜுயுடன் சோ்ந்து மாதேஷை கொலை செய்ய திட்டமிட்டாா். வெள்ளிக்கிழமை செட்டேரி செல்லும் சாலையில் உள்ள தனது நிலத்தில் இருந்த கொட்டகையில் சாப்பிட்டு கொண்டிருந்த மாதேஷை, பிரபு அவரது நண்பா் சிவராஜ் ஆகியோா் சரமாரியாக வெட்டினா்.

இதில் பலத்த காயமடைந்த மாதேஷ், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து அஞ்செட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான பிரபு, சிவராஜை தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com