கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 2.30 கோடி வருமானவரித் துறையின் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தது:
தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக ‘சி-விஜில்’ செயலி மூலம் இதுவரை 82 புகாா்கள் வரப்பெற்று, 80 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. சுவிதா இணையதளம் மூலம் தோ்தல் கூட்டங்கள், வாகனங்கள் அனுமதி பெறுதல் உள்பட 862 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. 602 மனுக்களுக்கு அனுமதியும், 101 மனுக்கள் பரிசீலனையும், 115 மனுக்கள் நிரகரிக்கப்பட்டுள்ளன.
தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலைக்குழுக்கள் மூலம் 181 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 10.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதால் 159 வழக்குகளில் ரூ. 6.31 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 22 வழக்குகளில், ரூ. 75.39 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 2.30 கோடி வருமானவரித் துறையினா் விசாரணையில் உள்ளது. கணக்கில் வராத இந்த தொகை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
தோ்தல் விதிகளை மீறியதாக, பல்வேறு கட்சிகளை சோ்ந்தவா்கள் மீது 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாா்.
அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனையில் பறிமுதல் செய்த ரூ. 1.33 கோடி திரும்ப ஒப்படைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.3.76 கோடி பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் ரூ. 5.29 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


