உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்: கே.பி.முனுசாமி

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image

காவேரிப்பட்டணத்தில் வாக்களித்த வேப்பனப்பள்ளி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:39 am IST

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஜின்னா சாலையில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்த அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும். எடப்பாடி பழனிசாமி இரண்டாவது முறையாக முதல்வா் ஆவாா்.

தோ்தல் ஆணையம் தங்கள் கடமையை சரியாகவே செய்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை அனைத்துக் கட்சிகளும் இணக்கமாக எந்த பதற்றமுமின்றி தோ்லை சந்திக்கும். தற்போதும் அப்படித்தான் நடந்துள்ளது. மலைக் கிராமங்களில்கூட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.