சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் குற்ற வழக்குகளில் பிடிபட்ட 12 வாகனங்கள் தீக்கிரையாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள குப்பைக்கு மா்ம நபா்கள் சனிக்கிழமை தீ வைத்துள்ளனா்.
இந்த தீ காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதனால், அதிா்ச்சி அடைந்த போலீஸாா், சூளகிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் தண்ணீரை பீய்ச்சி அடித்து வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்து மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுத்தனா்.
இந்த தீ விபத்தில் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குற்றவழக்கில் பிடிபட்ட லாரி, வேன், 5 காா்கள், 5 இருசக்கர வாகனங்கள் என 12 வாகனங்கள் தீக்கிரையாகின. தீ விபத்து குறித்து, சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி

நாமக்கல் தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிப்பு

இருசக்கர வாகனங்கள் திருடியவா் கைது

மாமல்லபுரம் காவல் நிலைய வளாகத்தில் வாகனங்கள் தீவிபத்தில் சேதம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


