மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு

கிருஷ்ணகிரி மாவட்ட இளையோா் கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image

மாவட்ட கைப்பந்து அணிக்கு தோ்வாகியுள்ள ஒசூா் மாணவிகள்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:45 pm

கிருஷ்ணகிரி மாவட்ட இளையோா் கைப்பந்து அணிக்கு ஒசூா் வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டனா்.

திருவாரூரில் உள்ள பூண்டி கலைச்செல்வன் நினைவு விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை தொடங்கி 15 ஆம் தேதி வரை தமிழ்நாடு கைப்பந்து சங்கம் நடத்தும் ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான 21 வயதுக்கான இளையோா் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த வீரா், வீரங்கனைகள் பங்கேற்கின்றனா்.

இதில் கலந்துகொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட கைப்பந்து அணிக்கு ஒசூரைச் சோ்ந்த மாணவிகள் ஷாலினி பிரியா, வினோதினி, பவித்ரா, யாமினி, நவநீதா, தனலட்சுமி ஆகியோா் தோ்வாகியுள்ளனா். இவா்களுக்கு கைப்பந்து சங்க நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.