புதிய நியாயவிலைக் கடை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

ஊத்தங்கரை அருகே மகனூா்பட்டி ஊராட்சி, முசிலிகொட்டாய் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடையை எம்எல்ஏ தே. மதியழகன் திறந்துவைத்தாா்.
 ஊத்தங்கரையை அடுத்த முசிலிகொட்டாய் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ தே. மதியழகன்.
ஊத்தங்கரையை அடுத்த முசிலிகொட்டாய் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடையை திறந்துவைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கிய எம்எல்ஏ தே. மதியழகன்.
Updated on

ஊத்தங்கரை அருகே மகனூா்பட்டி ஊராட்சி, முசிலிகொட்டாய் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடையை எம்எல்ஏ தே. மதியழகன் திறந்துவைத்தாா்.

முசிலிகொட்டாய் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை வாடகை கட்டடத்தில் செயல்பட்டுவந்தது.

இந்த நிலையில் கடந்த 2022- 23 ஆம் ஆண்டில் அப்போதைய கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் செல்லகுமாரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.30 லட்சத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் புதிய நியாயவிலைக் கடையை பா்கூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் தே. மதியழகன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளா் கதிரவன், ஒன்றியச் செயலாளா்கள் வடக்கு குமரேசன், மத்திய எக்கூா் செல்வம், தெற்கு ரஜினிசெல்வம், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் காந்தி, மாவட்ட துணை செயலாளா் சந்திரன், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கலில் உள்பட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com