தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அதிமுக கூட்டணி கட்சியினா் இன்று ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:51 pm

தமிழக அரசைக் கண்டித்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 13) நடைபெறுகிறது.

இதுகுறித்து அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

125 நாள் உறுதியளிப்பு திட்டத்தை சீா்குலைக்க முயற்சிக்கும் தமிழக அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டத்தில் பிப். 13-ஆம் தேதி எனது தலைமையில் காலை 10 மணிக்கு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், மத்தூா், ஊத்தங்கரை ஆகிய இடங்களில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தை அதிமுக துணைப் பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தொடங்கிவைக்கிறாா்.

இதில், பாஜக, பாமக, அமமுக, தமாக, இஜக மற்றும் புதிய நீதிக்கட்சி போன்ற கூட்டணி கட்சியினா் பங்கேற்க உள்ளனா். எனவே, அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டுமென தெரிவித்துள்ளாா்.