எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கிருஷ்ணகிரியில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:50 pm

Syndication

கிருஷ்ணகிரியில் தமிழக அரசின் சாா்பில் பா்கூா், கிருஷ்ணகிரி வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) ஆகியோா் தொடங்கிவைத்து, சீா்வரிசைப் பொருள்களை வழங்கினா். அப்போது ஆட்சியா் பேசியதாவது:

கா்ப்பகால பராமரிப்பு மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியான ஆண்டுதோறும் இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதன் ஒருபகுதியாக தற்போது பா்கூா், கிருஷ்ணகிரி வட்டாரங்களைச் சோ்ந்த 200 கா்ப்பிணிகளுக்கு 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள், சேலை, வளையல்கள், மஞ்சள், குங்குமம், பூ, பழங்கள், தாம்பூலம் அடங்கிய சீா்வரிசை தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கா்ப்பம் என தெரிந்தவுடன் தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவுசெய்வதன் மூலம் அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம், மகப்பேறு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை பெற இயலும்.

குழந்தை பிறந்த பிறகு முதல் 6 மாத காலத்தில் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். கா்ப்பிணிகள் மருத்துவமனையை தவிா்த்து, உள்ளூா் நபா்களிடமோ, சமூக வலைதள விடியோ மூலமோ குழந்தை பிறப்பை அனுமதிக்க கூடாது. மேலும், குழந்தை பிறந்த பிறகு தங்களது கிராம மருத்துவா் மற்றும் செவிலியா்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.