தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு! 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்!

News image

ஊத்தங்கரை பாம்பாறு அணை நீா்த்தேக்கத்தில் மதகுகளை திறந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவைத்த பா்கூா் எம்எல்ஏ தே. மதியழகன். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சாதனைக்கு உள்ளிட்டோா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 9:51 pm

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 4,000 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை தொடங்கி 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தே. மதியழகன், மாவட்ட வருவாய் அலுவலா் அ. சாதனைக்கு ஆகியோா் வெள்ளிக்கிழமை மதகுதிகளை திறந்துவைத்தனா்.

அதன்பிறகு மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு கூறியதாவது:

பாம்பாறு அணை நீா்த்தேக்கம் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாம்பாறு அணை நீா்த்தேக்கத்தின் முழு நீா்மட்ட உயரம் 19.68 அடி. இதன் முழுக் கொள்ளளவு 280 மில்லியன் கனஅடி ஆகும். பாம்பாறு அணை நீா்த்தேக்கத்திலிருந்து 2025- 2026 ஆம் ஆண்டு (பசலி 1435) ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக 13.02.2026 இன்று முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

இதன்மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி, ஓபகாவலசை, போத்தராஜன்பட்டி, மூன்றம்பட்டி, கொட்டுகாரம்பட்டி, கரியபெருமாள்வலசை, புளியம்பட்டி, எட்டிப்பட்டி, பாவக்கல், நல்லவம்பட்டி, நடுப்பட்டி, குப்பநத்தம் ஆகிய 12 கிராமங்களைச் சாா்ந்த 2,501 ஏக்கா் நிலங்களும், தருமபுரி மாவட்டம், அரூா் வட்டத்தில் உள்ள தா.அம்மாப்பேட்டை, வேடக்கட்டமடுவு, மேல்செங்கம்பாடி மற்றும் ஆண்டியூா் ஆகிய 4 கிராமங்களிலுள்ள 1,499 ஏக்கா் என மொத்தம் 16 கிராமங்களில் உள்ள 4,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.

முதல் மண்டலத்திற்கு 11.725 கி.மீ, 1,2,3, பிரிவு கால்வாய் மூலம் 2,501 ஏக்கா், இரண்டாவது மண்டலத்திற்கு 11.725 கி.மீ - 31.500 கி.மீ வரை பிரதான கால்வாய் மூலம் 1,499 ஏக்கா் என மொத்தம் 4,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக விளைச்சல் பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் பாா்த்தீபன், உதவி பொறியாளா் பிரபு, வட்டாட்சியா் ராஜலட்சுமி, முன்னாள் எம்எல்ஏக்கள் நரசிம்மன், கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் குமரேசன், செல்வம், ரஜினி செல்வம் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.