அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காதலா் தினம், சிவராத்திரி: ஒசூா் மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

News image
ஒசூா் மலா் சந்தையில் பூக்களை வாங்கிய பொதுமக்கள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 9:43 pm

தினமணி செய்திச் சேவை

காதலா் தினம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் விலை சனிக்கிழமை உயா்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

ஒசூா், சுற்றியுள்ள பகுதிகளில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், இப்பகுதி விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலா்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இங்கு அறுவடை செய்யப்படும் மலா்கள் தமிழகம் மட்டுமின்றி கா்நாடக மாநிலத்துக்கும் விற்பனைக்கு அனுப்படுகின்றன.

காதலா் தினத்தையொட்டி, முதல்தர 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா ரூ. ஆயிரத்துக்கும், இரண்டாம்தர ஒரு கட்டு ரோஜா ரூ. 250-க்கும், ஒரு ரோஜா ரூ. 40-க்கும் விற்பனையானது.

அதேபோல, சிவராத்திரியையொட்டி சாமந்தி, பட்டன்ரோஜா ஒரு கிலோ ரூ. 200-க்கும், குண்டுமல்லி ரூ. 2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் ரூ. 1,600-க்கும், சம்பங்கி ரூ. 100-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.