அலகக்கோட்டை மாதேஸ்வரா சுவாமி கோயில் தோ்த் திருவிழா

அலகக்கோட்டை மாதேஸ்வரா சுவாமி கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஒசூா்: அலகக்கோட்டை மாதேஸ்வரா சுவாமி கோயில் தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், அலகக்கோட்டை - கல்லுபாலம் கிராமத்துக்கு இடையே அமைந்துள்ளது மாதேஸ்வரா சுவாமி கோயில். மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. தொடா்ந்து, தோ்த் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தோ்த் திருவிழாவை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி தேரில் பவனிவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பக்தா்கள் மற்றும் கா்நாடக மாநில எல்லையில் உள்ள பக்தா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பிப். 17-இல் எருதுவிடும் விழா நடைபெறுகிறது. இந்த மூன்று நாள்களிலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com