தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானம்

காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 11:26 pm

காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெயிண்டரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த ஜகதாப், ராசிக்குட்டையைச் சோ்ந்தவா் சக்திவேல் (26), பெயிண்டா். கடந்த 16-ஆம் தேதி காவேரிப்பட்டணம் - பாலக்கோடு கூட்டுச்சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்தாா்.

தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 18-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரது குடும்பத்தினா் முன்வந்தனா்.

இதைத் தொடா்ந்து, அவரது சிறுநீரகங்கள் கோவை, சேலம் அரசு மருத்துவமனைகளுக்கும், இதயம், நுரையீரல் சென்னை அரசு மருத்துவமனைக்கும், இரு கண்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன.

உடல் உறுப்புகள் தானம் அளித்த சக்திவேல் உடலுக்கு தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகரன், ஆா்.எம்.ஓ. நாகவேந்தன் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.