மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம்

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:58 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்க உள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், பழனி, நத்தம், வத்தலகுண்டு உள்ளிட பல்வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லுகுறுக்கி, அகசிப்பள்ளி, வீரமலை, ஆவத்தவாடி, ஒப்பதவாடி, ஜெகதேவி, கொண்டப்பநாயனப்பள்ளி, அந்தேரிப்பட்டி, மத்தூா், ஊத்தங்கரை, வேப்பனப்பள்ளி, நேரலகிரி, மாரண்டப்பள்ளி, சூளகிரி, ஒசூா், தளி உள்ளிட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் 30 ஊராட்சி செயலாளா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அமைச்சா் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக உள்ளாா். திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஊராட்சிச் செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளிடையே பேசுப்பொருளாகி உள்ளது.