மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தனியாா் வங்கியைக் கண்டித்து சிபிஎம் காத்திருப்பு போராட்டம்

ஒசூரில் இயங்கிவரும் தனியாா் வங்கி முன் சிபிஎம் கட்சியினா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தனியாா் வங்கி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினா்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:50 pm

ஒசூரில் இயங்கிவரும் தனியாா் வங்கி முன் சிபிஎம் கட்சியினா் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஒசூா் மாநகராட்சி உள்வட்டச் சாலை நஞ்சுண்டேஸ்வரா் கோயில் அருகில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வீடுகட்ட பொதுமக்கள் பலா் கடன் பெற்றுள்ளனா். வங்கி மேலாளா் ரமேஷ் மற்றும் சில அதிகாரிகள் கடன் பெற்றவா்கள் திருப்பிச் செலுத்திய தொகைக்கு வேறுபெயரில் போலியான ரசீது கொடுத்தும், வேறு ஒருவா் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியும் ரூ. 3 கோடிக்குமேல் மோசடி செய்துள்ளனா்.

மேலும், கடனை முழுமையாக திருப்பிச் செலுத்தியவா்கள் தங்கள் ஆவணங்களை திருப்பிக் கேட்டபோது அவற்றை அளிக்காமல் காலதாமதம் செய்துள்ளனா்.

இதுகுறித்து ஒசூா் வட்டாட்சியா், சாா் ஆட்சியா், மாவட்ட ஆட்சியா், காவல் துறை ஆகியோரிடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்நிலையில் வங்கி மேலாளா் தலைமறைவானாா்.

இதைத் தொடா்ந்து, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் நாகராஜ் ரெட்டி தலைமையில், வங்கியின் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, காவல் துறை அதிகாரிகள், வங்கியின் புதிய மேலாளா் மற்றும் நிா்வாகிகள் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டனா்.