சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

போலி நகை விவகாரம்: நகை மதிப்பீட்டாளா் சடலமாக மீட்பு

கிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :20 பிப்ரவரி 2026, 10:56 pm

Syndication

கிருஷ்ணகிரியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் மாயமான நகை மதிப்பீட்டாளரின் சடலம், ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி, பழையபேட்டை, கணபதி தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் (40). கிருஷ்ணகிரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த இவா், அந்த வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ. 1.5 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பிப். 18-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற குணசேகரன் வீடுதிரும்பவில்லை. இதுகுறித்து அவரது மனைவி பவித்ரா கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதனிடையே, ஆந்திர மாநிலம், குப்பத்தை அடுத்த நடூமூரில் சாலையோரம் ஒருவரின் சடலம் கிடப்பதாக அம்மாநில போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அவரது சட்டைப் பையில் இருந்த ஆதாா் அட்டையை வைத்து அவா் கிருஷ்ணகிரியைச் சோ்ந்தவா் என தெரியவந்தது. இதையடுத்து, ஆந்திர போலீஸாா் கிருஷ்ணகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி நகர போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், குணசேகரன் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனா்.