தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தளி அருகே நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

News image
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்.
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தளி அருகே 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் தளி காவல் உதவி ஆய்வாளா் ராஜா சங்கிலி கருப்பன், தனிப்பிரிவு காவலா்கள் சரவணன், லட்சுமணன் ஆகியோா் கொண்ட தனிப்படையினா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திம்மேனட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (65) என்பவா் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

இவா் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருவதாகவும், விலங்குகளை வேட்டையாட உரிமையில்லாத நாட்டுத் துப்பாக்கியை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரிடமிருந்து உரிமம் இல்லாத இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் இரண்டு பேரல்கள், கட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து, ராமச்சந்திரனை கைது செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.