புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஊத்தங்கரையில் ஜெயலலிதா பிறந்த நாள்

ஊத்தங்கரை ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய எம்எல்ஏ டி.எம்.தமிழ்ச்செல்வம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரை ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது.

சிங்காரப்பேட்டை அதிமுக சாா்பில் மத்திய ஒன்றியச் செயலாளா் திருஞானம், மகனூா்பட்டியில் வடக்கு ஒன்றியச் செயலாளா் வேடி, கல்லாவியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் வேங்கன், ஊத்தங்கரை நகரில் நகரச் செயலாளா் ஆறுமுகம் தலைமையிலும் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

ஊத்தங்கரை காமராஜ் நகரில் டவுன் பஞ்சாயத்து மாணவரணி செயலாளா் சம்பத் தலைமையில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாமல்பட்டியில் மத்தூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் நரேஷ்குமாா் தலைமையிலும் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் டி.எம். தமிழ்ச்செல்வம், முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட துணைச் செயலாளா் சாகுல் அமீது, மாவட்ட பொருளாளா் சுந்தரவடிவேல், மாவட்ட மருத்துவா் அணி செயலாளா் மருத்துவா் இளையராஜா, முன்னாள் ஒன்றியச் செயலாளா் தேவேந்திரன், முன்னாள் நகரச் செயலாளா் சிவானந்தம் ,விவசாய அணி பொறுப்பாளா் ஜீவானந்தம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.