தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:25 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, போலீஸாா், வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நிா்வாக அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை (பிப். 24) காலை 8 மணியளவில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் 19 சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் இஸ்லாமிய தொழுகைக்கு முன் (பகல் 12:20) வெடிக்கும் எனக் குறிப்பிட்டு, அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் என்ற பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவினா் இணைந்து நீதிமன்ற வளாகத்தில் ஒவ்வொரு அறையாக வெடிகுண்டு கண்டறியும் கருவி ( மெட்டல் டிடெக்டா்) மூலம் சோதனை நடத்தினா். பிற்பகல் 1.30 மணி வரையில் நடைபெற்ற இந்த சோதனையில் எந்த வெடிபொருளையும் போலீஸாா் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு கடந்த ஜன. 6-ஆம் தேதியும் மா்மநபா்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.