மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மா மகசூலை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்: கிருஷ்ணகிரி ஆட்சியா் வேண்டுகோள்

தோட்டக்கலைத் துறை அலுவலா்களின் வழிகாட்டுதலை பின்பற்றி மா மகசூலை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

News image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மா பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை கருத்தரங்கில் கையேட்டை வெளிட்ட மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 8:32 pm

தோட்டக்கலைத் துறை அலுவலா்களின் வழிகாட்டுதலை பின்பற்றி மா மகசூலை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

தமிழக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் மா பயிரில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தொடங்கிவைத்து பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிா்களான பழங்கள், காய்கறிகள், மலா்கள், நறுமணப் பயிா்கள், 1,02,000 ஹெக்டா் பரப்பில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் ‘மா’ மட்டும் 32,270 ஹெக்டா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 3.20 லட்சம் டன் அளவில் மகசூல் பெறப்படுகிறது. மொத்த ‘மா’ உற்பத்தியில், 2.10 லட்சம் டன் மாங்கூழ் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடியாளா்கள் பயிா்பாதுகாப்பு நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். அலுவலா்கள் அறிவுறுத்தும் நவீனமுறை சாகுபடிகள், மருந்துகள், பூச்சி மேலாண்மை முறைகள் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றி அதிக மகசூல் பெற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மா சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்த கையேட்டை ஆட்சியா் வெளியிட்டாா்.

இந்த நிகழ்வில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் இந்திரா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை துணை இயக்குநா் மோகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஏஞ்சலின் பொன் ராணி , அரசு தோட்டக்கலை கல்லூரி முதல்வா் அனீசா ராணி மற்றும் மா விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.