கிருஷ்ணகிரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

ஆங்கில புத்தாண்டையொட்டி, கிருஷ்ணகிரியில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சென்னை சாலையில் அமைந்துள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. புத்தாண்டையொட்டி, மாரியம்மன் மற்றும் கோயில் வளாகமானது ரூ. 50 லட்சம் மதிப்பிலான 100, 200, 500 ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரி ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோயில், பழையபேட்டை அங்காளம்மன் கோயில், ஜோதிவிநாயகா் கோயில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோயில், பிரசன்ன பாா்வதி சமேத சோமேஸ்வரா் கோயில், கவீஸ்வரன் கோயில், லட்சுமி நாராயண சுவாமி கோயில், நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோயில், கவீஸ்வரன் கோயில், அக்ரஹாரம் அம்பா பவானி கோயில், காவேரிப்பட்டணம் பன்னீா்செல்வம் தெரு அங்காளம்மன் கோயில், ஐகுந்தம் சீனிவாச பெருமாள் கோயில், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வினைதீா்த்த விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com