ஜன. 6 இல் அரசு உறுதிமொழிக் குழு கிருஷ்ணகிரி வருகை

சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகின்றனா்.
Updated on

சட்டப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகின்றனா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ் குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவையின் 2024- 2026 ஆம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழிக் குழு அதன் தலைவா் தி. வேல்முருகன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வருகின்றனா். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கின்றனா். பிற்பகல் 2 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் உயா் அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com