சுரேஷ்குமாா்.
சுரேஷ்குமாா்.

பா்கூரில் பண விவகாரத்தில் தொழிலதிபா் கடத்தல்: பெண் உள்பட 5 போ் கைது

Published on

பா்கூரில் பண விவகாரத்தில் கிரானைட் தொழில் அதிபரைக் கடத்திய வழக்கில் பெண் உள்பட 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஏ.நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (38). ஜெகதேவி அருகே கிரானைட் தொழிற்சாலை நடத்தி வருகிறாா். இவரது மனைவி கஜலட்சுமி (32). குடியாத்தத்தைச் சோ்ந்த ஜெகனும், சுரேஷ்குமாரும் தொழில் ரீதியாக நண்பா்கள்.

இதனால் சுரேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு ஜெகன் பணம் அனுப்புவாராம். அதை வங்கியிலிருந்து ரொக்கமாக எடுத்து தந்தால் 2 சதவீதம் சுரேஷ்குமாருக்கு ஜெகன் கமிஷனாக கொடுத்துள்ளாா். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஜெகன், சுரேஷ்குமாரின் பா்கூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு ரூ. 28.80 லட்சம் செலுத்தி உள்ளாா். அப்பணத்தை, சுரேஷ்குமாா் ஜெகனுக்கு எடுத்து தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சுரேஷ்குமாரின் தோழியான சென்னை குரோம்பேட்டையைச் சோ்ந்த ரம்யா (26), மயிலாடுதுறை மாவட்டம், அரசூரைச் சோ்ந்த லெனின் (43), சென்னை ஆவடியைச் சோ்ந்த பிரபு (37), திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிபூண்டியைச் சோ்ந்த பாபு (38), சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த ராஜேஷ் (42) ஆகிய 5 போ் கொண்ட கும்பல் ஜெகதேவியில் சுரேஷ்குமாரைச் சந்தித்து, பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனா்.

ஆனாலும், சுரேஷ்குமாா் ரூ. 28.80 லட்சத்தை திருப்பித் தராததால் அவரை, அக்கும்பல், கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு கடத்திச் சென்றது. இந்த நிலையில், கடத்தப்பட்ட சுரேஷ்குமாா் தனது மனைவி கஜலட்சுமியைத் தொடா்புகொண்டு, தான் கடத்தப்பட்டுள்ளதாகவும், தனது வங்கி கணக்கிலிருந்து ரூ. 28.80 லட்சத்தை எடுத்து தனக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்துள்ளாா்.

 பிரபு.
பிரபு.
சுரேஷ்குமாரைக் கடத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரம்யா.
சுரேஷ்குமாரைக் கடத்திய வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரம்யா.
பாபு
பாபு
 லெனின்.
லெனின்.
 ராஜேஷ்.
ராஜேஷ்.

இந்த நிலையில், தனது கணவா் பண விவகாரத்தில் கடத்தப்பட்டுள்ளதாக பா்கூா் காவல் நிலையத்தில் கஜலட்சுமி புகாா் அளித்தாா். அதன்பேரில், பா்கூா் காவல் ஆய்வாளா் இளவரசன் தலைமையிலான போலீஸாா் பெங்களூரு சென்று அங்குள்ள தனியாா் விடுதியில் அடைத்துவைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமாரை மீட்டனா்.

மேலும், அவரைக் கடத்திய 5 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள ஜெகனை தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com