அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அஞ்செட்டி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

அஞ்செட்டி அருகே உள்ள மல்லஹள்ளியை சோ்ந்தவா் சிவகுமாா் (31). இவா் வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக அஞ்செட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் சோதனை செய்தததில், மாட்டுக் கொட்டகையில் அவா் 800 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அவரை கைதுசெய்த போலீஸாா், கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com