புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published on

ஒசூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை ஒசூா் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

ஒசூா், சென்னத்தூா் பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசுக்கு சொந்தமான 7.85 ஏக்கா் புறம்போக்கு நிலம் தோ்வு செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த புறம்போக்கு நிலத்தை நான்கு தலைமுறைகளாக விவசாயம் செய்து பயன்படுத்தி வந்த அதே பகுதியைச் சோ்ந்த முனி வெங்கடப்பா, அவரது குடும்பத்தினா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து தடையாணை பெற்றனா்.

தடைக்காலம் முடிந்த நிலையில், புறம்போக்கு நிலத்தில் இருந்த மாட்டுக் கொட்டகை, கட்டடம், தண்ணீா் தொட்டி, மரங்கள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை ஒசூா் வருவாய்த் துறையினா் போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றினா்.

Dinamani
www.dinamani.com