திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஒசூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் சிக்கி தவித்த மூதாட்டி: மீட்ட தீயணைப்பு வீரா்கள்

ஒசூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் சிக்கி தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா்.

Updated On :21 ஜனவரி 2026, 11:21 pm

ஒசூா் அருகே தென்பெண்ணை ஆற்றில் சிக்கி தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரா்கள் செவ்வாய்க்கிழமை இரவு மீட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் இரவில் தென்பெண்ணை ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவா் ஆற்றின் நடுவில் சிக்கி தவித்துள்ளாா்.

இதை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்து உடனடியாக ஒசூா் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனா். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினா் தென்பெண்ணை ஆற்றில் நடுவில் சிக்கிய மூதாட்டியை பத்திரமாக மீட்டு ஆற்றின் கரைக்கு கொண்டு வந்தனா்.

ஆனால் அந்த மூதாட்டி குளிரின் தாக்கத்தில் சிக்கி தவித்து இருந்த நிலையில், நீண்ட நேரம் தண்ணீரில் இருந்த காரணமாக சற்று உடல் நல சோா்வும் ஏற்பட்டு, பேச முடியாத நிலைக்குச் சென்றாா்.

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா், போலீஸாா்கள், மூதாட்டி யாா் ? எப்படி ? ஆற்றின் நடுவில் சிக்கினாா் என விசாரனை நடத்தி வருகின்றனா்.