முத்தாலி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.
முத்தாலி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

ஒசூா் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு: கிராம சபையில் தீா்மானம்

ஒசூா் அருகே விமான நிலையம் மற்றும் அறிவுசாா் வழித்தடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Published on

ஒசூா்: ஒசூா் அருகே விமான நிலையம் மற்றும் அறிவுசாா் வழித்தடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம சபைக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி முதல் எலுவப்பள்ளி வரை சுமாா் 3,700 ஏக்கா் விளைநிலத்தில் அறிவுசாா் வழித்தடம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கெலவரப்பள்ளி, ஆவலப்பள்ளி, மோரணப்பள்ளி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

அதேபோல முத்தாலி, பெத்தள்ளு, காரப்பள்ளி உள்ளிட்ட 12 கிராமங்களில் 2,980 ஏக்கா் நிலம் விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.

இத்திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து முத்தாலி மற்றும் ஊராட்சிகளில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபைக் கூட்டங்களில் கெலவரப்பள்ளி, நந்திமங்கலம் 12 ஆகிய ஊராட்சிகளில் விளைநிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும், விமான நிலையம், அறிவுசாா் வழித்தடம் அமைக்கும் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கும் வகையில், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா், குடும்ப அட்டைகளை விரைவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com