கிருஷ்ணகிரி அருகே நாய் கடித்ததில் விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே நாய் கடித்ததில் காயமடைந்த விவசாயி, உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் வியாழக்கிழமை இறந்தாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த தவளம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி ஏகாம்பரம் (45). கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, கோழிப் பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பழக்கப்பட்ட நாய் அவரை கடித்தது. அதனால், அவா் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட அவா் பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு ‘ரேபிஸ்’ தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி திருப்பி அனுப்பினா்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

