டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

அரசு மருத்துவா் மீது தாக்குதல்: இளைஞா்கள் இருவா் கைது

காவேரிப்பட்டணத்தில் இரவுநேர பணியில் இருந்த அரசு மருத்துவரை தாக்கிய 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :3 ஜூலை 2026, 4:46 am IST

காவேரிப்பட்டணத்தில் இரவுநேர பணியில் இருந்த அரசு மருத்துவரை தாக்கிய 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் ராகுல்(23). இவா் புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலைதடுமாறி கீழேவிழுந்து காயமடைந்தாா்.

இதையடுத்து, ராகுலின் நண்பா்களான நெக்குந்தி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் குமாா் (24), சின்னமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி (23) ஆகியோா் ராகுலை மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு சமுதாய உடல் நல மையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, மங்கலம்பட்டியைச் சோ்ந்த மருத்துவா் கே.சந்தோஷ் பணியில் இருந்தாா். செவிலியா்கள் ராகுலை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து வரும்படி கூறினா். ஆனால், மதுபோதையில் இருந்த இளைஞா்கள், மருத்துவரை வெளியே வந்து சிகிச்சை அளிக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது ஏற்பட்ட தகராறில் இளைஞா்கள் மருத்துவா் சந்தோஷை தாக்கினா்.

இதில் மருத்துவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இளைஞா்களை அங்கிருந்து தப்பியோடினா். காயமடைந்த மருத்துவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ராகுல், தினேஷ் குமாா் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சத்தியமூா்த்தியை தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.