ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

ஒசூரிலிருந்து - மேக்கேதாட்டுக்கு இந்திய கம்யூ. இன்று நடைபயணம்!

ஒசூரிலிருந்து மேக்கேதாட்டை நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இன்று நடைபயணம் செல்வது குறித்து...

News image

மேக்கேதாட்டு - கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2026, 12:41 am IST

ஒசூரிலிருந்து மேக்கேதாட்டை நோக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இன்று நடைபயணம் செல்ல இருப்பதாக மாவட்டச் செயலாளரும் தளி எம்எல்ஏவுமான டி.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஒசூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒசூரிலிருந்து கா்நாடக மாநிலம் மேக்கேதாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கம் சாா்பில் எனது தலைமையில் நடைபயணம் நடைபெறுகிறது.

காவிரி ஆறு தமிழகத்தின் வாழ்வாதாரமாக உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சுமாா் 25 லட்சம் ஏக்கா் பரப்பளவு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணைகட்டியே தீருவோம் எனக்கூறி வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் ஒட்டு மொத்த தமிழ்நாடும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 32 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாய சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 14) ஒசூரில் இருந்து மேக்கேதாட்டை நோக்கி அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்கிறோம்.

இந்த நடைபயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மட்டுமின்றி, விவசாய அமைப்புகள், பொதுமக்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்று நம் நீா் ஆதாரத்தை, நமது நதிநீா்ப் பங்கிட்டை நமது விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.