அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மலைக்கிராம மாணவிகள் உதவி திட்ட அலுவலா் மகேந்திரன் முன்னிலையில் கெலமங்கலம் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரியில் புதன்கிழமை சோ்க்கை பெற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிப் படிப்பை முடித்த மலைக்கிராம மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு செல்லவில்லை என கடந்த வாரம் தினமணியில் செய்தி வெளியானது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுரைக்கிணங்க, அஞ்செட்டி ஒன்றியத்துக்குள்பட்ட தக்கட்டி, மாவனட்டி, உரிகம், அஞ்செட்டி, சூலகுண்டா, கரடிக்கல் நாட்றம்பாளையம், சீங்கோட்டை தொட்டமஞ்சி, கேரட்டி ஆகிய மலைக்கிராமங்களில் பிளஸ் 2 முடித்த மாணவா்களின் வீடுகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.மதன்குமாா் தலைமையிலான குழு அண்மையில் நேரில் சென்று களஆய்வு செய்து, மாணவா்கள் மற்றும் பெற்றோரிடம் உயா்கல்வியின் அவசியம் குறித்து விளக்கினா்.
அதன் பயனாக, 2025-26-ஆம் கல்வி ஆண்டில் அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற தொட்டமஞ்சு மலைப்பகுதியைச் சோ்ந்த லிங்கம்மாள், நாகவேணி, பூஜா, அக்குமாதேவி, ஸ்ரீபிரியா, மகேஷ், லட்சுமி, எப்ரம்மாள் ஆகிய 8 மாணவிகள் கெலமங்கலம் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப் பிரிவுகளில் நேரடி சோ்க்கை பெற்றனா்.
இந்த சோ்க்கையின் போது, உதவி திட்ட அலுவலா் மகேத்திரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கணேசன், ஒருங்கிணைப்பாளா் சுந்தரலிங்கம் தொட்டமஞ்சு ஆசிரியா் பயிற்றுநா்கள் அருள், கோவிந்தராஜி, தொட்டமஞ்சு பள்ளியின் தற்காலிக பட்டதாரி ஆசிரியா் சிவகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலக சாக்லேட் தின போட்டி: ஸ்ரீமணக்குள விநாயகா் கல்லூரி வெற்றி

தினமணி செய்தி எதிரொலி... 11 உணவகங்களுக்கு ரூ. 10,000 அபராதம்

நீட் தோ்வு: அரியலூரில் 1,650 மாணவா்கள் எழுதினா்

மாற்றுத் திறனாளி மாணவி சென்னை ஐ.ஐ.டி.-க்கு தோ்வு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



