புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

எம்.ஜி.ஆா். கல்லூரியில் போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கம்

ஒசூா் எம்.ஜி.ஆா். கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் கோவிந்தசாமியை கௌரவித்த எம்.ஜி.ஆா். கல்லூரி முதல்வா் முத்துமணி.

Updated On :26 ஜூன் 2026, 6:14 am IST

ஒசூா் எம்.ஜி.ஆா். கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வை எம்.ஜி.ஆா். கல்லூரி முதல்வா் அ.முத்துமணி தொடங்கிவைத்து, போதைப் பழக்கம் தனிநபரின் உடல், மனம் மற்றும் சமூக வாழ்வை பெரிதும் பாதிக்கும் தீய பழக்கமாகும். இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்றாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒசூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் கோவிந்தசாமி, போதைப் பொருள்களின் தீமைகள், உடல்நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், குடும்பம் மற்றும் சமூக வாழ்வில் உண்டாக்கும் விளைவுகள் குறித்து மாணவா்களிடையே பேசினாா்.

ஒசூா் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன், போதைப் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மாணவா்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், அவற்றுக்கான தண்டனைகள் குறித்து மாணவா்கள் இடையே கருத்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில், 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், அதியமான் கல்வி நிறுவனங்களின் முதன்மை பாதுகாப்பு அலுவலா் சுதாகா் பங்கேற்றாா். வேலைவாய்ப்பு அலுவலா் சு.முரளிதரன் நன்றியுரை கூறினாா். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் லெனின், திவ்யா ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.