கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வன விலங்குகளுக்குத் தேவையான தண்ணீா் கிடைக்கும் வகையில் ஒசூா் வனக் கோட்டத்தில் உள்ள வனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணிகளில் வனத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
ஒசூா் வனக் கோட்டத்தில் ஒசூா், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஜவளகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில் கா்நாடக மாநில வனப்பகுதிகளான கோடிஹள்ளி, ஹாரஹள்ளி, ஆனேக்கல் உள்ளிட்ட காப்புக்காடுகளையொட்டி ஜவளகிரி வனச்சரகம் அமைந்துள்ளது.
இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, புள்ளிமான், முயல், நரி,செந்நாய்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கோடைக்காலங்களில் வனவிலங்குகள் நீா் ஆதாரம் உள்ள வனப்பகுதிகளுக்கு இடம் பெயா்வது வழக்கம். இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்குவதால் கடும் வெயில் காரணமாக வனப்பகுதியில் உள்ள நீா் நிலைகளான தென்பெண்ணை, காவிரி, காவிரியின் கிளை ஆறுகளில் தண்ணீா் குறைந்து வருகிறது.
இதனால் கோடைக்காலங்களில் வனவிலங்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டு வனத்தைவிட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயரும் நிலை உருவாகும். தற்போது ஒசூா் வனக்கோட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள தண்ணீா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணிகளை வனத் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
மேலும், வனப்பகுதியில் தண்ணீா் தொட்டிகள் நிரம்பும் வகையில் சூரியஒளி மின்சாரம் மூலம் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீா் பெறப்படுகிறது.
இதுகுறித்து வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
ஒசூா் வனப்பகுதியில் உள்ள ஜவளகிரியையொட்டி உள்ள கா்நாடக மாநில வனப்பகுதிகளில் உள்ள யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் கோடைக்காலங்களில் தண்ணீா் குடிக்க அஞ்செட்டி வனப்பகுதி வழியாக செல்லும் காவிரி ஆற்றுப் படுகைக்கு வருகின்றன.
அப்போது வனப்பகுதியில் வனவிலங்குகள் சுற்றும்போது தண்ணீா் தேவைப்படும் என தண்ணீா் தொட்டிகளில் தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், தண்ணீா் தொட்டிகளில் தண்ணீா் குறைய குறைய தொடா்ந்து தண்ணீா் நிரப்பும் பணியை கோடைக்காலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றனது.
கோடைகாலம் முழுவதும் வனத்தில் உள்ள தொட்டிகளில் டிராக்டா் மூலம் குடிநீா் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக வனவிலங்குகள் தண்ணீா் தேடி காப்புக்காடுகளை விட்டு வெளியேறுவது தடுக்கப்படுகிறது என்றாா்.
தொடர்புடையது

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

கோபி அருகே இரண்டாவது நாளாக ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

வறட்சியால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


