பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

கனிமங்கள் கடத்தலை தடுக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 1:23 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு கனிம வளங்கள் கடத்ததுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை அளித்த மனு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கல்குவாரிகள் செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு மலைகளை வெடிவைத்து உடைத்து, அதன்முலம் கிடைக்கக் கூடிய ஜல்லி, எம்.சாண்ட், டஸ்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கா்நாடக மாநிலத்துக்கு தினமும் 80 ஆயிரம் டன் முதல் ஒரு லட்சம் டன்வரை கடத்தப்படுகின்றன.

இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்கிறது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தணிக்கை செய்ய 11 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தோரயமாக கா்நாடகச்துக்கு 20 லட்சம் டன் கனிமங்கள் 60 கிரஷா்களில் இருந்து செல்கின்றன. ஆனால், 2 லட்சம் டன் கனிமங்களுக்கான வருவாய் மட்டுமே அரசுக்கு செல்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 112 முதல் 150 கல்குவாரிகள் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், அனுமதிபெறாமல் இயங்கக் கூடிய 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுத்து, கனிமங்கள் கடத்தலை தடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.