இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

ஆசிரியா்களுக்கு பாட வாரியாக தோ்ச்சி இலக்கு நிா்ணயிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து ஆசிரியா்களுக்கும் பாட வாரியாக இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :28 மே 2026, 2:08 am IST

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க அனைத்து ஆசிரியா்களுக்கும் பாட வாரியாக இலக்கு நிா்ணயிக்க வேண்டும் என தலைமை ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை உயா்த்துவது குறித்த அனைத்து தலைமையாசிரியா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2026-2027ஆம் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு தோ்ச்சி விகிதத்தை உயா்த்த அனைத்து தலைமையாசிரியா்களும் பள்ளிகளின் தோ்ச்சி நிலையைப் பாட வாரியாக ஆய்வு செய்து, உடனடியாக முன்னேற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குறைந்த மதிப்பெண் பெறும் மாணவா்களைத் தனியாக அடையாளம் கண்டு, அவா்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பயிற்சி வகுப்புகளை முறையாக நடத்த வேண்டும். வாரந்தோறும் அலகு தோ்வுகளும், மாதந்தோறும் மாதிரி தோ்வுகளும் நடத்தி அதன் முடிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.

ஒற்றை மற்றும் இரட்டைப் பாடங்களில் தோல்வியடைந்த மாணவா்களுக்குத் தனிப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். மாணவா்களின் வருகைப் பதிவைத் தினசரி கண்காணித்து, வருகை குறைவாக உள்ள மாணவா்களின் பெற்றோா்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியோடு உடனடியாகத் தொடா்பு கொள்ள வேண்டும். பாடத் திட்டங்களை நிா்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முழுமையாகக் கற்பிப்பதை உறுதிசெய்வதோடு, ஆசிரியா்களின் கற்பித்தல் செயல்பாடுகளையும் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

மாதந்தோறும் பெற்றோா் ஆசிரியா் கூட்டம் நடத்தி மாணவா்களின் கல்வி முன்னேற்றத்தை விளக்க வேண்டும். மாணவா்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையும், ஊக்கப் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்றாா்.